Friday, September 16, 2011

தேவங்குடி கிளை அலுவலகம் திறப்பு விழா



கடலூர் மாவட்டம்  தேவங்குடி கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 01 - 09 - 2011 மாலை 3 மணியளவில் அன்று  நடைபெற்றது. கிளை அமைப்பாளர் திரு S . சொக்கலிங்கம், கிளை துணை அமைப்பாளர் திரு G. கோபால்சாமி மற்றும் கிளை இணை அமைப்பாளர் திரு J . அரங்கசாமி ஆகியோர் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். நமது அமைப்பின் தலைவர் உயர்திரு ர. சிவநேசன்  அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட கல்வி அணி ஒருங்கிணைப்பாளர் திரு R . சுந்தர், கடலூர் மாவட்ட போக்குவரத்து அணி அமைப்பாளர் திரு R . ராஜன் பாபு, சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர் திரு S . நடராஜன் மற்றும் திரு C . சிவலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.