எனது உயிரினும் மேலான தோழர்களே...
நமது இயக்கமானது அநீதிக்கு எதிராக போரடுவதற்க்காகவே உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கமாகும். உலக உயிர்கள் எங்கெல்லாம் நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுக்க, போராட உருவாக்கப்பட்ட இயக்கமே நமது NSWF (National Social Welfare Foundation). ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் போன்ற இடைவெளிகளை இல்லாமல் செய்வதற்காக உண்மையாக பாடுபடுகின்ற இயக்கம் நமது இயக்கம். ஜாதிகுடிசைகளையும் சேரி குடிசைகளையும் ஒன்றிணைக்கும் பாலம்தான் நமது இயக்கம். அண்ணார்ந்து பார்க்கின்ற மாளிகையும் அதன் அருகில் இருக்கின்ற ஓலை குடிசையும் ஏன்? ஏழைகளுக்கு ஏற்றம் எப்போது? மாற்றம் எப்போது? மாற்றும் கருவியாக நாம் இருக்க வேண்டாமா? எளியவர் வலியவர் என்ற ஏளனமான நிலையை இல்லாமல் செய்வோம்.
இன்று மனிதன் மனிதநேயத்தை இழந்து மனித மிருகமாக மாக மாறிவிட்டான். அதனால் தான் எங்கெங்கு காணினும் மனித உரிமைகள் மீறப்படுகின்றது. உதரணமாக பரமக்குடி துப்பாக்கி சூட்டினை எடுத்துக்கொண்டால், மனித உயிர்கள் காக்கை குருவிகள் போன்று காவல் துறையால் சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றன. அரசுக்கோ, காவல் துறைக்கோ உயிர்களைக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது? எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க நமது இயக்கமும் நாமும் இவ்வுலகில் தவிர்க்கவே முடியாத சக்தியாக மாற வேண்டும். சட்டங்கள் அனைவருக்கும் சமமாக வேண்டும் என்றால் நாம் சட்டத்தையே மாற்றும் மாபெரும் மக்கள் சக்த்தியாக மாற வேண்டும். அதனால் தான் தோழர்களே உங்களிடம் எப்போதும் நான் கூறுவது "ஒவ்வொரு வீட்டிலும் NSWF உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும்". தோழர்களே சிந்தியுங்கள் நாம் வாழும் காலத்தில் மனித உரிமை மீறல் அவலங்களை துடைத்து எறியாவிட்டால் பிறகு எப்பொழுது இதற்க்கு விடிவு காலம் பிறக்கும்.
"இன்று முடியாவிட்டால் பிறகு எப்பொழுது முடியும்?
நம்மால் முடியாவிட்டால் பிறகு யாரால் முடியும்?" என்றெண்ணி இயக்கப்பபணிகளை ஆற்றுங்கள். மாற்றம் ஒருநாள் நிகழ்ந்தே தீரும். நம்மால் மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும். உலகம் கட்டாயம் நம்மை திரும்பி பார்க்கும்.
குறிப்பு :
நமது அமைப்பானது பல்வேறு தளங்களில் மக்களின் உரிமைக்காக போராடுகிறது.குறிப்பாக (1) சமூக சேவை பிரிவு, (2) ஊழல் எதிர்ப்பு பிரிவு, (3) மகளிர் உரிமை பிரிவு, (4) நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு, (5) மனித உரிமைகள் பிரிவு என்ற ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்தந்த பிரிவை சேர்ந்த நமது இயக்க மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, கொம்யூன், நகர, கிளை தலைவர்கள் பணியாற்றுகின்றார்கள். இயக்க வளர்சிக்காக அரும்பாடு படும் தோழர்களை வாழ்த்தி வணங்குகின்றேன்...உறுப்பினர்களும், நிர்வாகிகளும் என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் nswfindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் பங்கேற்க உள்ள நமது இயக்க தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.....
மீண்டும் பேசுவேன்...