கடலூர் மாவட்டம் கே. என்.பேட்டை கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 18-09-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு N .விஜயராம் வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K . பாரதி மோகன் , சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. R . திருமாறன், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V . சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P . கீதா மற்றும் வண்டிப்பாளையம் திருமதி M. அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.