Saturday, October 22, 2011

கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா

கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா  கடந்த 5.10.2011 சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வேணுகோபாலபுர  தெரு, ( பில்லுகடை சந்து ) மஞ்சகுப்பம், கடலூர்-1  என்ற விலாசத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் உயர்திரு R.சிவநேசன் அவர்கள் விழாவை துவக்கி வைத்து அன்னதானம் மற்றும் மின் மோட்டார் வழங்கி சிறப்புரை வழங்கினார்.  இவ்விழாவுக்கு கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R .சுமதி தலைமை தாங்கினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N .விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V.சாவித்திரி வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு R.செந்தில்குமார், சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு R.திருமாறன், வண்டிப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் திருமதி M.அமுதா, K.N.பேட்டை ஒருங்கிணைப்பாளர் திரு N.விஜயராம் , K.N.பேட்டை இணை ஒருங்கிணைப்பாளர் திரு நூர்மகமது ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக விழாவுக்கு ஏற்ப்பாடு செய்து இருந்த மகளிர் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R .சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V.சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் திருமதி B.கஜலக்ஷ்மி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P. கீதா ஆகியோரை தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.