சிதம்பரம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் NATIONAL SOCIAL WELFARE FOUNDATION NSWF - மனித உரிமைகள் பிரிவு சிதம்பரம் நகர கிளை சார்பாக கடந்த 01 /10 /2011 அன்று வழங்கப்பட்டது.
நகர ஒருங்கிணைப்பாளர் திருமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாரதிமோகன் வரவேற்றார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். அமைப்பின் நிறுவன தலைவர் சிவநேசன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கடலூர் மாவட்ட, ஒன்றிய , நகர மற்றும் கிளை அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவை தொடர்ந்து கடலூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.