Sunday, October 30, 2011
Friday, October 28, 2011
Monday, October 24, 2011
Saturday, October 22, 2011
கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா கடந்த 5.10.2011 சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வேணுகோபாலபுர தெரு, ( பில்லுகடை சந்து ) மஞ்சகுப்பம், கடலூர்-1 என்ற விலாசத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் உயர்திரு R.சிவநேசன் அவர்கள் விழாவை துவக்கி வைத்து அன்னதானம் மற்றும் மின் மோட்டார் வழங்கி சிறப்புரை வழங்கினார். இவ்விழாவுக்கு கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R .சுமதி தலைமை தாங்கினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N .விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V.சாவித்திரி வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு R.செந்தில்குமார், சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு R.திருமாறன், வண்டிப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் திருமதி M.அமுதா, K.N.பேட்டை ஒருங்கிணைப்பாளர் திரு N.விஜயராம் , K.N.பேட்டை இணை ஒருங்கிணைப்பாளர் திரு நூர்மகமது ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக விழாவுக்கு ஏற்ப்பாடு செய்து இருந்த மகளிர் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R .சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V.சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் திருமதி B.கஜலக்ஷ்மி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P. கீதா ஆகியோரை தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
Tuesday, October 18, 2011
Friday, October 14, 2011
இலவச தொழில் பயிற்சி முகாம்
கடந்த 10 /10 /2011 அன்று கடலூர் மண்டல அலுவலகத்தில் மகளிருக்கு இலவச தொழில் பயிற்சி முகாம் நடை பெற்றது.
தலைவர் உயர்திரு ர.சிவநேசன் அவர்கள் முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இம்முகாமில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திரு. R.பச்சையப்பன் ( Senior surveillance Inspector , Annamalai University ) கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இம்முகாமில் தென் மண்டல தலைமை அமைப்பாளர் திரு N.விநாயகமூர்த்தி, சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர் திரு S .நடராஜன் மற்றும் கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு R . செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைவர் உயர்திரு ர.சிவநேசன் அவர்கள் முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இம்முகாமில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திரு. R.பச்சையப்பன் ( Senior surveillance Inspector , Annamalai University ) கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இம்முகாமில் தென் மண்டல தலைமை அமைப்பாளர் திரு N.விநாயகமூர்த்தி, சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர் திரு S .நடராஜன் மற்றும் கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு R . செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Thursday, October 13, 2011
கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா வருகின்ற 15 .10 .2011 சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வேணுகோபாலபுர தெரு, ( பில்லுகடை சந்து ) மஞ்சகுப்பம், கடலூர்-1 என்ற விலாசத்தில் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட மகளிர் அணி மற்றும் சுற்று சூழல்அணி இணைந்து (மகளிர் மட்டும் ) நடத்தும் இவ்விழாவை கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை அன்புடன் கேட்டு கொள்கின்றேன். இவ்விழாவை நடத்தும் திருமதி R.சுமதி, திருமதி V.சாவித்திரி, திருமதி B.கஜலக்ஷ்மி மற்றும் திருமதி P. கீதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
Saturday, October 8, 2011
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு இலவச அரிசி , மளிகை பொருட்கள்
சிதம்பரம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் NATIONAL SOCIAL WELFARE FOUNDATION NSWF - மனித உரிமைகள் பிரிவு சிதம்பரம் நகர கிளை சார்பாக கடந்த 01 /10 /2011 அன்று வழங்கப்பட்டது.
நகர ஒருங்கிணைப்பாளர் திருமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாரதிமோகன் வரவேற்றார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். அமைப்பின் நிறுவன தலைவர் சிவநேசன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கடலூர் மாவட்ட, ஒன்றிய , நகர மற்றும் கிளை அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவை தொடர்ந்து கடலூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
Subscribe to:
Posts (Atom)