Monday, July 18, 2011

வன்மையாக கண்டிக்கின்றோம்!


கடந்த 16 / 07 / 2011  அன்று மாலை 4 .45  மணியளவில் நமது NSWF - HUMAN RIGHTS SECTION  ன் விழுப்புரம் மாவட்ட தலைமை அமைப்பாளர் திரு R . பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் குமார் என்பவரும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணமலை செல்லும் சாலை சோழனூர் எல்லை வழியாக  இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது  இவர்களது பின்னல் வந்த கார் ( எண் TN : 32 , H 2845 ) இவர்களை வேகமாக இடித்து கீழே தள்ளியது. பலத்த காயம் பட்டு கீழே கிடந்த R . பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் குமார் இருவரையும் காரை ஓட்டி வந்த விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த ரவிவர்மன் என்பவரும் அவரது தந்தை பாலுசாமி என்பவரும் சேர்ந்து கொண்டு மனிதாபிமானம் இல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அடிபட்டு கிடந்த R . பாலமுருகன் மற்றும் குமார் இருவரையும் திரு சரவணபவன் என்பவர் 108 அம்புலன்சின்  உதவியுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இருவரும் இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, இவர்களை கொலை செய்ய முயன்ற ரவிவர்மன் மற்றும்  அவரது தந்தை பாலுசாமி ஆகியோருக்கு ஆதரவாக கையூட்டு  பெற்றுக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் காணை போலீசார் R . பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் குமார் இருவரும் சேர்ந்துகொண்டு ரவிவர்மன் என்பவரின் காரில் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததாகவும், மேலும் அவர்களின் காரை சேத படுத்தியதாகவும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் பாலமுருகன் தரப்பில் புகார் செய்ய முயன்றும் காணை போலீசார் அதனை வாங்க மறுத்து விட்டனர்.
இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்!  ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் காவல் நிலைய கட்ட பஞ்சாயத்துக்கள் இன்னும் குறையாமல் இருப்பது கேலி கூத்தாக உள்ளது. மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கே இந்நிலை என்றால் சராசரி மனிதர்களுக்கு கேட்கவா வேண்டும்? குஷ்டம் பிடித்தவன் கையில் வெண்ணையை வைத்தாலும் கையூட்டு பெற்றுக்கொண்டு அதை நக்கி சாப்பிடவும் தயாராக உள்ள சிலரால் மனித பிறவிக்கே கேவலமாக உள்ளது.... கையூட்டு பெற்றுக்கொண்டு NSWF -HUMAN RIGHTS SECTION ன் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் திரு R . பாலமுருகன் மீது பொய் வழக்கு பதிவு செய்த காணை காவல் நிலைய போலிசாரின் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.... மேலும் தவறு செய்த போலீசாரை உடனயாக நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவிவர்மன் மற்றும் பாலுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம். நீதி கிடைக்கும்வரை எமது இயக்கம் ஓயாது.....

~ர. சிவநேசன், தலைவர் NSWF