Friday, July 29, 2011

கடலூர் மாவட்டம் உடலபட்டு கிளை அலுவலகம் திறப்பு விழா

கடலூர்  மாவட்டம் உடலபட்டு கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 31-07-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி K . சுசீலா, ஒன்றிய மகளிர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி P. கலா மற்றும் ஒன்றிய மகளிர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் செல்வி G . முத்தம்மாள் ஆகியோர் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். தலைவர் உயர்திரு ர. சிவநேசன் அவர்கள் கிளை அலுவலகத்தை திறந்து வைத்து சட்ட விழிப்புணர்வு தொடர்பாக சிறப்புரை ஆற்றினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி , கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் , கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் திருமதி R . சுமதி, திருமதி B . கஜலக்ஷ்மி, திருமதி M . அமுதா மற்றும் திருமதி P . கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

சிதம்பரம் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் அன்பகம் முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா











சிதம்பரம் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் அன்பகம் முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா கடந்த 27 -07 -2011 மாலை 3 மணியளவில் சிதம்பரம் மேல வீதி O .S . தீன் பிடிங்கில் நடைபெற்றது. உயர்திரு தலைவர் R. சிவநேசன் அவர்கள் புதிய கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி, கடலூர் மாவட்ட   ஒருங்கிணைப்பாளர் திரு K . நடராஜன், கடலூர் மாவட்ட இணை  ஒருங்கிணைப்பாளர் திரு. R. செந்தில் குமார், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்  திருமதி R . சுமதி, திருமதி B . கஜலக்ஷ்மி, காரைக்கால்  மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. G . மருதமுத்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  மாநில சேவாதள கூடுதல் அமைப்பாளர் திரு K . V . M . S . சரவணகுமார் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் திரு V . சிவராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிதம்பரம் நகர அமைப்பாளர்கள் திரு R . திருமாறன் மற்றும் திரு K . பாரதி மோகன் ஆகியோர் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விழாவின் இறுதியாக சிதம்பரம் அன்பகம் முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது. 

Monday, July 18, 2011

வன்மையாக கண்டிக்கின்றோம்!


கடந்த 16 / 07 / 2011  அன்று மாலை 4 .45  மணியளவில் நமது NSWF - HUMAN RIGHTS SECTION  ன் விழுப்புரம் மாவட்ட தலைமை அமைப்பாளர் திரு R . பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் குமார் என்பவரும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணமலை செல்லும் சாலை சோழனூர் எல்லை வழியாக  இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது  இவர்களது பின்னல் வந்த கார் ( எண் TN : 32 , H 2845 ) இவர்களை வேகமாக இடித்து கீழே தள்ளியது. பலத்த காயம் பட்டு கீழே கிடந்த R . பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் குமார் இருவரையும் காரை ஓட்டி வந்த விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த ரவிவர்மன் என்பவரும் அவரது தந்தை பாலுசாமி என்பவரும் சேர்ந்து கொண்டு மனிதாபிமானம் இல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அடிபட்டு கிடந்த R . பாலமுருகன் மற்றும் குமார் இருவரையும் திரு சரவணபவன் என்பவர் 108 அம்புலன்சின்  உதவியுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இருவரும் இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, இவர்களை கொலை செய்ய முயன்ற ரவிவர்மன் மற்றும்  அவரது தந்தை பாலுசாமி ஆகியோருக்கு ஆதரவாக கையூட்டு  பெற்றுக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் காணை போலீசார் R . பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் குமார் இருவரும் சேர்ந்துகொண்டு ரவிவர்மன் என்பவரின் காரில் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததாகவும், மேலும் அவர்களின் காரை சேத படுத்தியதாகவும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் பாலமுருகன் தரப்பில் புகார் செய்ய முயன்றும் காணை போலீசார் அதனை வாங்க மறுத்து விட்டனர்.
இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்!  ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் காவல் நிலைய கட்ட பஞ்சாயத்துக்கள் இன்னும் குறையாமல் இருப்பது கேலி கூத்தாக உள்ளது. மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கே இந்நிலை என்றால் சராசரி மனிதர்களுக்கு கேட்கவா வேண்டும்? குஷ்டம் பிடித்தவன் கையில் வெண்ணையை வைத்தாலும் கையூட்டு பெற்றுக்கொண்டு அதை நக்கி சாப்பிடவும் தயாராக உள்ள சிலரால் மனித பிறவிக்கே கேவலமாக உள்ளது.... கையூட்டு பெற்றுக்கொண்டு NSWF -HUMAN RIGHTS SECTION ன் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் திரு R . பாலமுருகன் மீது பொய் வழக்கு பதிவு செய்த காணை காவல் நிலைய போலிசாரின் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.... மேலும் தவறு செய்த போலீசாரை உடனயாக நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவிவர்மன் மற்றும் பாலுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம். நீதி கிடைக்கும்வரை எமது இயக்கம் ஓயாது.....

~ர. சிவநேசன், தலைவர் NSWF

முக்கிய தீர்மானம் (நாள்: 10 / 07 / 2011 )

நமது அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கிழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் கலந்து கொண்ட அனைவராலும் நிறைவேற்றபட்டது. அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கிழ் கண்ட தீர்மானத்தின் படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.......



Tuesday, July 12, 2011

இரண்டாம் ஆண்டு துவக்க விழா















நமது NATIONAL SOCIAL WELFARE FOUNDATION (NSWF) இன்   இரண்டாம் ஆண்டு துவக்க விழா புதுச்சேரி மாநிலம் எண்: 234 , திருவள்ளுவர் சாலை, பிள்ளை தோட்டம், புதுச்சேரி - 13 , என்ற விலாசத்தில் உள்ள நமது NSWF  இயக்கத்தின் புதுச்சேரி மாநில தலைமை அலுவலகத்தில் 10 / 07 / 2011 அன்று  நண்பகல் சரியாக 2 மணியளவில்  நடைபெற்றது. இவிழாவிர்க்கு நமது இயக்கத்தின் தலைவர் திரு. ர. சிவநேசன் அவர்கள் தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில மகளிர் அணி தலைவர் திருமதி B . பானு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் . கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். இவிழாவில் புரவலர்கள் திரு S . முத்து குமார், திரு S .L .V . சத்திய நாராயணன் , மாநில இளைஞர் அணி அமைப்பாளர் திரு C . குமார ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தலைவர் அவர்கள் புதுச்சேரி மாநில தலைமை அலுவலகம் மற்றும் புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்து பேருரை ஆற்றினார். இவிழாவில் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவின் இறுதியாக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இதுவரை பணியாற்றிய திரு N . விநாயக மூர்த்தி அவர்களின் களப்பணியை பாராட்டி சிறந்த களப்பணியளராக விருது பெற்றார். மேலும் அவர் தென்மண்டல தலைமை அமைப்பாளராக பதவி உயர்வும் பெற்றார். அமைப்பில் இதுவரை சரியாக பணியாற்றாத பலரும் வேறு பதவிக்கு மாற்றியும், பதவியிலிருந்து நீக்கி சாதாரண உறுப்பினர்களாக மாற்றியும் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். புதுச்சேரி மாநில தலைமை அமைப்பாளராக  மகளிர் அணி தலைவர் திருமதி B . பானு அவர்கள் பதவி உயர்வு பெற்றார்.

Thursday, July 7, 2011

NSWF இரண்டாம் ஆண்டு துவக்க விழா

நமது National Social Welfare Foundation (NSWF ) ன் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவுக்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

இடம்: எண்: 234 , திருவள்ளுவர் சாலை, பிள்ளைதோட்டம், புதுச்சேரி-13

நாள்:
10 /07 /2011 ,

நேரம் :
சரியாக நண்பகல் 2  மணி முதல்

நிகழ்சிகள்:
   
1 ) புதுச்சேரி மாநில தலைமை அலுவலகம் திறப்பு ,
2 ) புதிய இணைய தளம் துவக்கம் , 
3 ) சிறந்த களப்பணியாளர் விருது , 
4 ) சிறந்த சேவகர் விருது ,
5 ) நிர்வாக மாற்றம் அறிவிப்பு ...

தலைமை : தலைவர் ர. சிவநேசன் அவர்கள்

அனைத்து NSWF மாநில , மாவட்ட , ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள் ...