Tuesday, June 28, 2011

மயிலாடுதுறை கிளை திறப்பு விழா

















கடந்த 26 -06 -2011 அன்று காலை 11 மணி அளவில்   நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் நமது அமைப்பின் புதிய "NSWF -மனித உரிமைகள் பிரிவு" கிளை திறப்பு விழா நடைபெற்றது. உயர்திரு தலைவர் ர. சிவநேசன் அவர்கள் புதிய கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி, கடலூர் மாவட்ட இணை  ஒருங்கிணைப்பாளர் திரு K . நடராஜன், கடலூர் மாவட்ட துணை  ஒருங்கிணைப்பாளர் திரு. R. செந்தில் குமார், கடலூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி V . சாவித்திரி, திருமதி R . சுமதி, காரைக்கால்  மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. G . மருதமுத்து, காரைக்கால்  மாவட்ட இணை  ஒருங்கிணைப்பாளர் திரு. S . மணிமாறன், காரைக்கால்  மாவட்ட துணை  ஒருங்கிணைப்பாளர் திரு. B . ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக மாநில புரவலர்கள் திரு P .R . செந்தில் குமார் மற்றும் திரு S . ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருமதி S . புஷ்பவல்லி வரவேற்ப்புரை வழங்கினார். திருமதி N . மீனாட்சி மற்றும் திருமதி S . ஜெயசுதா அகியோர் நன்றியுரை வழங்கினர். இறுதியாக கடந்த 17 -06 -2011 அன்று மயிலாடுதுறை இந்திரா காலனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கபட்ட 28  குடும்பங்களுக்கு புத்தாடை, அரிசி உள்ளிட்ட உதவிகள் நமது NSWF அமைப்பின் சார்பாக வழங்க பட்டது